யாழில் 2 பொலிஸாரை நையப்பிடைத்த நபர்கள்!! -குழு மோதலை விலக்க சென்ற போது சம்பவம்- - Yarl Thinakkural

யாழில் 2 பொலிஸாரை நையப்பிடைத்த நபர்கள்!! -குழு மோதலை விலக்க சென்ற போது சம்பவம்-

யாழ்.ஊரெழு பகுதியில் குழு மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கிவிடச் சென்ற கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் இருவர் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. 

குறித்த பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய சென்ற அந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

ஊரெழு போயிட்டி பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவரை கைது செய்வதற்காக மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு போலீசார் சென்றுள்ளனர்.  

அப்பகுதிக்கு சென்று குறித்த நபரை தேடி திரிந்த போது அங்கு இரு தரப்புக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த முரண்பாடு தொடர்பில் விசாரிக்க சென்ற போலீசார் மீது அங்கு நின்ற இளைஞர் குழு போலீசார் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் இரு போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post