பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!! -2021 முதல் நடைமுறையில்- - Yarl Thinakkural

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!! -2021 முதல் நடைமுறையில்-

புதிய அரசாங்கத்தின் அடுத்து அதிரடி நடவடிக்கையாக ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை அடுத்த வருடம் 2021 ஆம் ஆண்டு முதல் தடை செய்ய அமைச்சரவையில் முன்மொழியப்பட உள்ளது.

குறிப்பாக சம்போ மற்றும் ஹேயர் ஜெல், பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள், சாக்லெட் பாக்கெட்டுகளை தடை செய்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் ஹேமந்த ஜெயசிங்க மேற்படி விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்:- 

குளிர்பானங்களைக் கொண்ட சிறிய பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்துவதும் இந்த திட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட உள்ளது.

பிளாஸ்டிக் தயிர் கரண்டிகள் மற்றும் ஆடை பொதிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கிளிப்களுக்கான சாத்தியமான மாற்று வழிகளையும் பரிசீலித்து வருவகின்றோம் என்றார்.

Post a Comment

Previous Post Next Post