18 வயது யுவதி சடலமாக மீட்பு!! - Yarl Thinakkural

18 வயது யுவதி சடலமாக மீட்பு!!

மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற 18 வயது யுவதியொருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகலையில் இருந்து சுற்றுலாவுக்காக மஹியங்கனைக்கு சென்றுக்கொண்டிருந்த இளைஞன் மற்றும் யுவதியொருவரே இவ்வாறு மகாவலி கங்கைக்கு நீராடச் சென்றுள்ளனர்.

மேற்படி நீராடச் சென்ற இளைஞனும் குறித்த யுவதியும் குருநாகல் கடுபொத மற்றும் திரகம பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீராடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் நீராடியதன் காரணமாகவே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post