மஸ்கெலிய - சிறிய சூரியகந்தை தோட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தற்பொழுது இரண்டு மாத கர்பிணியாக உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தாய் சிறுமியை கைவிட்டுச்சென்றுள்ளமையில் சிறுமி பாட்டியிடம் வளர்ந்து வந்துள்ளார்.
கடந்த 3 மாதங்களாக சிறுமியுடன் குறித்த தோட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் நிலை தொடர்பில் அவரின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment