சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்!! - Yarl Thinakkural

சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்!!

சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெறவுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சகாதேவன் நிலக்சனின் கடந்த 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அன்று அதிகாலை வேளை ஆடியபாதம் வீதி கொக்குவில் பகுதியில் உள்ள அவருடைய வீடு இராணுவ புலனாய்வாளர்களும், இராணுவ ஒட்டு குழுவினரும் முற்றுகையிடப்பட்டது.

வீட்டில் இருந்த சகாதேவன் நிலக்சனை விசாரிக்க வேண்டும் என்று கூறிய ஆயுத குழுவினர் வீட்டு வாசலில் அழைத்து விசாரித்தனர்.

இதன் போது சகாதேவன் நிலக்சனின் தாய் தந்தையர்கள் முன்னிலையி விசாரிக்கப்பட்ட போது திடீரென சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

Post a Comment

Previous Post Next Post