பத்து தேர்தல் அதிகாரிகள் அதிரடியாகப் பணி நீக்கம்
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பாட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பத்து சிரேஸ்ட தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட கட்சி ஒன்றின் தேர்தல் பரப்புரைகளில் இவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாகத் தெரியவந்ததையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுவரேலியா மாவட்ட தேர்தல் அதிகாரி ரோஹண புஸ்பகுமார தெரிவித்தார்.
குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒன்றின் பரப்புரைகளில் இவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்தே இவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
Post a Comment