நிறுத்தப்பட்டது SLPP யின் பிரசாரங்கள்!! -பசில் ராஜபக்ச அறிவிப்பு- - Yarl Thinakkural

நிறுத்தப்பட்டது SLPP யின் பிரசாரங்கள்!! -பசில் ராஜபக்ச அறிவிப்பு-

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் அனைத்து தேர்தல் பிரசார கூட்டங்களும் தற்காலிகமாக நிறுத்துமாறு பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 13, 14, 15 ஆம் திகதிகளில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்கும் மக்கள் சந்திப்புகள் அனைத்தும் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு மேலதிகமாக பொதுத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பொதுக்கூட்டங்கள் மற்றும் சிறிய ஒன்றுகூடல்களையும் மட்டுப்படுத்துமாறும் பசில் ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், சிறிய ஒன்றுகூடல்களை நடத்தப்படுமாயின் அதில் சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறும் பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post