கட்டுநாயக்கவில் PCR ஆய்வுகூடம்!! - Yarl Thinakkural

கட்டுநாயக்கவில் PCR ஆய்வுகூடம்!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனை ஆய்வுகூடம் திறக்கப்பட்டுள்ளது.

இது மூலக்கூற்று உயிரியல் வைத்திய ஆய்வுகூடம் என பெயரிடப்பட்டுள்ளதோடு, அதில் 2 PCR இயந்திரங்கள், 2 நியூக்ளிய அமிலங்களை பிரிக்கும் தன்னியக்க இயந்திரங்கள், 3 பாதுகாப்பு பெட்டகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு 500 விமானப் பயணிகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் குறித்த ஆய்வுகூடம் அமைந்துள்ளது.

குறித்த மருத்துவ ஆய்வுகூடத்தின் மதிப்பு சுமார் 70 மில்லியன் ரூபாயாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post