உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணயம் சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஆராயும் குழுவின் முதற்கட்ட அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன.
இதன்படி குறித்த குற்றங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை ஒன்று சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment