தந்தையை அடித்து கொலை செய்த மகன்!! - Yarl Thinakkural

தந்தையை அடித்து கொலை செய்த மகன்!!

பாதுக்க - பொல்காட்டுவ - கஹவல பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த மோதலில் தந்தை உயிரிழந்துள்ளார். 

61 வயதான நபரே இதன் போது கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் இம்மோதல் சம்பவத்தில் 34 வயதான மகன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பாதுக்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக மோதல் சம்பவம் ஏற்பட்டு தந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post