மின்சாரம் தாக்கி இரு குடும்பஸ்தர்கள் பலி!! -யானைக்கு அமைத்த மின் வேலி சிக்கிய பரிதாபம்- - Yarl Thinakkural

மின்சாரம் தாக்கி இரு குடும்பஸ்தர்கள் பலி!! -யானைக்கு அமைத்த மின் வேலி சிக்கிய பரிதாபம்-

காட்டு யானைகளில் வருகையை தடுக்க கம்பிகளில் பாய்ச்சிய மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - கரவெட்டியாறு கிராமத்தில் வசிக்கும் 5 பிள்ளைகளின் தந்தையான முனிசாமி தங்கையா (வயது 58) என்பவரும் அவரது மைத்துனனான 7 பிள்ளைகளின் தந்தை சீனித்தம்பி மணிவண்ணன் (வயது 51) ஆகியோரே மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

விளைந்த நெல் வயல்களைப் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக கம்பிகளில் பாய்ச்சப்பட்ட மின்சாரம் தாக்கியதிலேயே இந்த இருவரும் பலியானதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வழமைபோல தமது நெல் வயல் காவலில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகளை இவர்கள் தொட்டுள்ளனர். அவ்வேளையில் ஸ்தலத்திலேயே இவர்கள் துடிதுடித்து இறந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக  ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post