புலிகள் மீள உருவாக வேண்டும்!! -விஜயகலா மீதான வழக்கு ஒத்திவைப்பு- - Yarl Thinakkural

புலிகள் மீள உருவாக வேண்டும்!! -விஜயகலா மீதான வழக்கு ஒத்திவைப்பு-

முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர் நவம்பர் 27 வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தமிழீழ விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டும் என்ற கருத்து தெரிவித்தது தொடர்பில்   முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

வழக்கு விசாரணைகளுக்காக விஜயகலா மகேஸ்வரன், சட்டத்தரணி தவராஜாவுடன் மன்றில் ஆஜராகியிருந்தார்.

வழக்கினைவிசாரணை செய்த நீதவான் எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி வரை வழக்கினை ஒத்திவைத்தார்.

Post a Comment

Previous Post Next Post