கொரோனா வைரஸ் தொடர்பான அச்சத்தை பொருட்படுத்தாது, சுகாதார நடமுறைகளை பின்பற்றி அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் என்று யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் கோரிக்கை விடுத்துள்ளார் .
நiபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
எதிர்வரும் 5 ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நாம் அனைவரும் எமது வாக்குரிமையை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் நீங்கள் உங்களுக்கு சேவை செய்யக் கூடிய சரியானவர்களை பாராளுமன்றம் அனுப்ப நீங்கள் கட்டாயம் தேர்தலில் பங்குபற்றவேண்டும்.
கொரோணா என்று பயப்படாமல் தங்களுக்குரிய இந்த வாக்களிக்கும் வாய்ப்பினை பாவித்து எங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றார்.
Post a Comment