கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் சுமார் 400 வீடுகளை இலக்குவைத்து பலமணிநேர சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறிக்கப்பட்டே மேற்படி சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகள், குற்றச் செயல்களில் ஈடுப்பட்டவர்கள் போன்ற பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளின் பொருட்டு இத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, உந்துருளி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் போது 280 மேற்பட்ட பொலிஸார், இராணுவத்தினர் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Post a Comment