இராணுவ சிப்பாயை மோதிய மோட்டார் சைக்கிள்!! -கைதடியில் சற்று முன் சம்பவம்- - Yarl Thinakkural

இராணுவ சிப்பாயை மோதிய மோட்டார் சைக்கிள்!! -கைதடியில் சற்று முன் சம்பவம்-

யாழ்.கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் நின்ற இராணுவ சிப்பாய் மீது மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த சிப்பாயின் கால் முறிவடைந்ததுள்ளது.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கைதடி பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் அதி வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்துள்ளது.அதனை கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் மறித்துள்ளார்.

இதன்போது அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இராணுவச் சிப்பாய் மீது மோதியுள்ளது. இதனால் இராணுவச் சிப்பாயின் கால் முறிவடைந்துள்ளது. படுகாயம் அடைந்த இராணுவ சிப்பாய் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மோதி இளைஞன் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post