மேம்பாலத்தில் கோர விபத்து!! -இராணுவச் சிப்பாய் ஒருவர் பலி: இரு படையினர் படுகாயம்- - Yarl Thinakkural

மேம்பாலத்தில் கோர விபத்து!! -இராணுவச் சிப்பாய் ஒருவர் பலி: இரு படையினர் படுகாயம்-

கொழும்பு, நுகேகொட மேம்பாலத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார்.

இவ்விபத்தில் படு காயமடைந்த மேலும் 2 இராணுவத்தினர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இராணுவத்தினர் பயணம் செய்த வாகனம் ஒன்று பஸ் ஒன்றுடன் மோதியபோதே விபத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இராணுவ வாகனத்தின் சாரதியே விபத்தில் பலியாகியுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து நுகேகொட பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post