மாணவர்களுக்கு எச்சரிக்கை: கைக் செய்யப்படும் இணைய வகுப்புகள்!! -தவறான படங்கள் அனுப்புவதாகவும் குற்றச்சாட்டு- - Yarl Thinakkural

மாணவர்களுக்கு எச்சரிக்கை: கைக் செய்யப்படும் இணைய வகுப்புகள்!! -தவறான படங்கள் அனுப்புவதாகவும் குற்றச்சாட்டு-

வடக்கு மாகாணவர்களுக்கு நடத்தப்படும் இணையவளி கற்கை செயலிகள் கைக் செய்யப்படுகின்து என்று வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் வே.த.ஜேயந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைக் செய்யும் கும்பல் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தவறான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்புகின்றார்கள் என்றும் அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடந்த ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் வே.த.ஜேயந்தன் அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

கொரோனா வைரஸ் காரனமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சூம் (Zoom) மற்றும் வைவர் (Viber) ஊடாக முன்னெடுத்திருந்தோம்.

அந்த 3 மாத காலத்திலே அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி நலன் கருதி குறித்த செயலிகளின் ஊடாக கற்றல் நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது.

தற்போது அதனுடாக எங்களுடைய அதிபர்கள் சங்க உறுப்பினர்களாக இருக்கின்றவர்களும் அத்தோடு இல்லாதவர்களுடைய தொலைபோசி இலக்கத்தினை கக் செய்து அதாவது இடைமறித்து எங்களுடைய தரவுகளை திருடி அந்த குழுவுக்குள் இருக்கின்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் எனைய உறுப்பினர்களுக்கு தவறான தகவலினை அதாவது பொருத்தமில்லாத தகவல்கள், படங்களை அனுப்பி அதிபர்கள், ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

இதன் காரனமாக எங்களுடைய அதிபர்கள், ஆசிரியர்கள் மிகுந்த மன உழைச்சலுக்கும், விரத்திக்கும் ஆளாகியிருக்கின்றார்கள்.
இனிவரும் காலங்களிலும் இப்படியானதொரு நிகழ்வு கல்வி புலத்திலே நடைபெறுமாக இருந்தால் மாணவர் சமுதாயத்தை பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும்.

076 5628297, 076 2138291, 0764909561, 076 69416303 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவே தவறான படங்கள் மற்றும் தகவல்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுகின்றது என்றார். 

Post a Comment

Previous Post Next Post