யாழில் மோப்ப நாய் ரொக்கியிடம் மாட்டும் திருடர்கள்!! -இன்றும் அராலியில் ஒருவர் சிக்சினார்- - Yarl Thinakkural

யாழில் மோப்ப நாய் ரொக்கியிடம் மாட்டும் திருடர்கள்!! -இன்றும் அராலியில் ஒருவர் சிக்சினார்-

யாழ்.மாவட்டத்தின் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் உள்ள ரொக்கிய என்ற பெயர் கொண்ட மோப்ப நாய் தொடர்ந்தும் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுடைய வீடுகளை சரியாக பொலிஸாருக் இணங்காட்டியுள்ளது. 

இதன்படி வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கூரையை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் குறித்த மோப்ப நாயின் உதவியுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி பகுதியில் நேற்று வீட்டின் கூரையை உடைத்து வீட்டிலிருந்த தாலிக்கொடி திருடப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கோப்பாய் போலீஸ் பிரிவினரிடம் இருக்கும் மோப்பநாய் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற மோப்பநாய் பிரிவினர் “ரொக்கி”என்ற மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து அண்மையிலுள்ள வீடு ஒன்றிற்குள் குறித்த மோப்பநாய் சென்றுள்ளது.அவ்வாறு சென்ற வீட்டின் உரிமையாளரை போலீசார் விசாரணை செய்தபோது தான் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து திருடியதாக கூறப்படும் ஐந்தரைப் பவுன் தாலிக்கொடியை குறித்த சந்தேக நபரின் வீட்டிற்கு அண்மையில் உள்ள பற்றைக்குள் ஒளித்து வைத்துள்ளதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

பின்னர் போலீசாருடன் சென்று அதனை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

Previous Post Next Post