காதலனை அச்சுறுத்தி காதலியை துஸ்பிரயோகம் செய்த கும்பல்!! -கடற்கரையில் சந்தித்த போது விபரீதம்- - Yarl Thinakkural

காதலனை அச்சுறுத்தி காதலியை துஸ்பிரயோகம் செய்த கும்பல்!! -கடற்கரையில் சந்தித்த போது விபரீதம்-

கடற்கரையில் சந்தித்துக் கொண்ட காதலர்களை சுற்றிவளைத்த கும்பல் ஒன்று காதலனை அச்சுறுத்தி, காதலியை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று பாணாந்துறையில் பதிவாகியுள்ளது. 

குறித்த பகுதியிணைச் சேர்ந்த இளைஞரும், யுவதியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். 

இவர்கள் வழமையாக அங்குள்ள கடற்கரைப் பகுதி ஒன்றில் சந்தித்தும் வந்துள்ளனர். இந்நிலையியில் நேற்று வழமை போன்று இருவரும் கடற்கரைப் பகுதியில் சந்தித்துள்ளனர். 

இதன் போது அங்கு வந்த இனந்தெரியாத குழுவினர் குறித்த காதலர்களை சுற்றிவளைத்துள்ளனர். 

மேலும் அந்த குழுவில் சிலர் காதலனை அச்சுறுத்தி அங்கிருந்து சிறிது தூரம் அழைத்துச் சென்றுள்ளனர். 

இச் சமயம் காதலியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதும், தற்போது அவர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்றும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post