சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினரும், தற்போது ஜ.தே.க வில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சர்வா என்று அழைக்கப்படும் சர்வேஸ்வரன் என்பருக்கு எதிராகவே மேற்ப்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று சாவகச்சேரியில் உள்ள அவருடைய அலுவலக பணிக்காக பெண் ஒருவர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் மாலை வேளை அலரிக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியில் ஓடிவந்துள்ளார்.
இவ்வாறு ஓடிவந்த பெண் வீதியில் நின்றவர்களிடம் சரண்டைந்துள்ளார்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்க்கு சாவகச்சேரி பொலிஸார் வந்துள்ளனர்.
அங்கு வந்த பொலிஸார் அப்பெண்ணை அங்கிருந்து பொலிஸ் நிலையம் அளைத்துச் சென்றுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் சர்வா தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக முறைப்படு பதிவு செய்துள்ளார்.
Post a Comment