பிள்ளையுடன் காணாமல் போன குடும்ப பெண்!! -வைத்திய சாலை சென்ற போது சம்பவம்- - Yarl Thinakkural

பிள்ளையுடன் காணாமல் போன குடும்ப பெண்!! -வைத்திய சாலை சென்ற போது சம்பவம்-

வவுனியா மாவட்டத்தில் உள்ள புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயார் 7 வயது மகனுடன் காணாமல் போயுள்ளதாக அவரின் கணவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 31 வயதான கிரிதரன் வக்சலா (சுரேக்கா) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்வதாக தெரிவித்து கடைசி மகளுடன் சென்றுள்ளார். 

இருப்பினும் அவர்கள் இதுவரையில் வீடு திரும்பவே இல்லை. இதனையடுத்து கணவரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காணாமல் போன குறித்த பெண்ணின் இடது பக்க கண்ணத்தில் கருப்பு நிறத்தில் மச்சம் காணப்படுவதுடன் அவரின் இறுதியாக சென்ற சமயத்தில் நீல நிற சுடிதாரும் வெள்ளை நிற சுடிதார் காலும் அணிந்துள்ளதாக அவரின் கணவர் தெரிவித்துள்ளார்.

இவரை யாராவது கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது கிரிதரன் - 0775255861, மோகன் - 0766327556, முகிசன் - 0778899787 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post