கொரோனா தொற்றுக்கு உள்ளான பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிசேக் பச்சனுக்கும் கடந்த 11 ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் மும்பையில் உள்ள நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் கடந்த 12 ஆம் திகதி வெளியானது.
அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் அபிசேக் பச்சனின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது ஆரத்யாவுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.
இதையடுத்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் கடந்த 18 ஆம் திகதி அதிகாலை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால் நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆங்கு ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யாவுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாகவும், இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அமிசேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Post a Comment