பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ்கள்!! -மஞ்சல் நிறமாக மாற்ற உத்தரவு- - Yarl Thinakkural

பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ்கள்!! -மஞ்சல் நிறமாக மாற்ற உத்தரவு-

பாடசாலை மாணவர்களுக்கான சேவையில் ஈடுபடும்; பேரூந்துக்கள் மற்றும் சிற்றுந்துக்கள் அனைத்தும் மஞ்சல் நிறத்தில் இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை பகுதியில் உள்ள போக்குவரத்து சேவை அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் காவல் துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

ந்த கலந்துரையாடலின் போது அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த விடயம் முன்வைக்கப்பட்ட போது அதற்கு பொலிஸார் மற்றும் பலரும் ஆதரவு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லும் பேரூந்துக்கள் மற்றும் சிற்றுந்துக்கள் எதிர்வரும் காலஙி;களில் கட்டாயம் மஞ்சல் நிறத்தில் காணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post