வவுனியாவில் வசிக்கும் இராணுவச் சிப்பாய்கு கொரோனா!! -குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்- - Yarl Thinakkural

வவுனியாவில் வசிக்கும் இராணுவச் சிப்பாய்கு கொரோனா!! -குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்-

வவுனியா மடுக்கந்தைப்பகுதியில் வசித்துவரும் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

கந்தக்காடு இராணுவ முகாமில் சாரதியாக பணியாற்றும் வவுனியா மடுகந்தை பகுதியை சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்து நேற்று முன்தினம் கந்தக்காடு இராணுவ முகாமிற்கு திரும்பி சென்றபோது கொரோனா மருத்துவப்பரிசோதனையில் அவருக்கு கெரரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று வவுனியாவிலுள்ள அவரது மனைவி, தாயார், மகள், உறவினர் உட்பட நான்கு பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post