பிரச்சாரத்திற்கு சென்ற கூட்டமைப்பின் மீது தாக்குதல்!! -சற்று முன் சுழிபுரத்தில் சம்பவம்- - Yarl Thinakkural

பிரச்சாரத்திற்கு சென்ற கூட்டமைப்பின் மீது தாக்குதல்!! -சற்று முன் சுழிபுரத்தில் சம்பவம்-

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்தின் போது இனந்தெரியாத நபர்களால் போத்தல் வீசப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சுழிபுரம் கல்விளான் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இரவு நடந்த கூட்டத்தின் போதே மேற்படி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. 

குறித்த பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் பேசிக் கொண்டிருக்கும் போதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மக்களோடு மக்களாக பிரச்சார கூட்டத்தின் கலந்து கொண்ட சிலர் இத்தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இத்தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். 

Post a Comment

Previous Post Next Post