தமிழ்நாட்டு அகதிகள் இலங்கைக்குள் நுழைய முயற்சி!! -கடலில் கண்காணிப்பை தீவிரம்- - Yarl Thinakkural

தமிழ்நாட்டு அகதிகள் இலங்கைக்குள் நுழைய முயற்சி!! -கடலில் கண்காணிப்பை தீவிரம்-

தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகளில் சிலர் படகுகள் மூலம் இலங்கைக்குள் நுழைய  முயற்சிகளை மேற்கொண்டுள்ளதை அடுத்து இலங்கை கடற்படையினர் வடபகுதி கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடற்படையினர்,கரையோர பொலிஸார் மற்றும் கிராமசேவையாளர்களுக்கு இது குறித்து எச்சரித்துள்ளோம் என வடமாகாண ஆளுநர் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக அகதிகள் அங்கிருந்து இலங்கை வருவதற்கு முயல்கின்றனர் என தகவல் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மீன்பிடி படகுகளில் ஏறி அவர்கள் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயலக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post