இத்தாலியில் மீண்டும் அபாயம் - Yarl Thinakkural

இத்தாலியில் மீண்டும் அபாயம்


இத்தாலியில் ஸ்ட்ரோம்போலி தீவில் உள்ள எரிமலை, மிகப்பெரிய சத்தத்துடன் திடீரென வெடித்து லாவா குழம்பை கக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

தைரேனியன் கடல் பகுதியில் அமைந்துள்ள 20ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிர்ப்புடன் உள்ள ஸ்ட்ரோம்போலி தீவில் உள்ள எரிமலை அவ்வப்போது வெடிப்பது வழமை. 2016ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஸ்ட்ரோம்போலி தீவில் சுமார் 500பேர் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் ஞாயிறு அதிகாலை 3மணியளவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலையில் இருந்து பட்டாசு வெடித்து சிதறுவது போன்று லாவா குழம்புகள் சிதறும் காட்சிகள் வெப் கமராவில் பதிவாகியுள்ளது. நான்கு நிமிடங்கள் வரை நீடித்த எரிமலை வெடிப்பு, வழக்கமான சராசரி எரிமலை வெடிப்பை விட 15மடங்கு சக்தி வாய்ந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post