நீர்க்குழியில் வீழ்ந்து மாணவன்!! -பரிதாப பலி- - Yarl Thinakkural

நீர்க்குழியில் வீழ்ந்து மாணவன்!! -பரிதாப பலி-

புத்தளம் சாலியாவெவ புளியங்குளம் பகுதியில் மாணவர் ஒருவர் நீர் நிறைந்த குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சாலியாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் புளியங்குளம், மஹாகமவில் வசிக்கும் 17 வயதுடைய மாணவன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நிலக்கடலை தோட்ட பகுதியில் உள்ள நீர்க்குழி ஒன்றில் முகத்தைக் கழுவ முயன்றபோது அதில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவன் பல ஆண்டுகளாக வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post