காதல் விவகாரம்!! -மாணவனும் மாணவியும் தற்கொலை- - Yarl Thinakkural

காதல் விவகாரம்!! -மாணவனும் மாணவியும் தற்கொலை-

மகவெலி காங்கையில் குதித்து பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் காதல் விவகாரம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு வேறு பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரத்தில் கல்வி கற்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5.45 மணியளவில் குறித்த இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பாடசாலை மாணவன் மற்றும் மாணவி நீண்ட காலமாக காதல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவன் மற்றும் மாணவியை நேற்றைய தினத்தில் காணவில்லை என அவர்களது பெற்றோர் இன்று காலை கடுகஸ்தொட்டை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post