மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூர கணவன்!! -யாழ்.குப்பிளானில் இன்று சம்பவம்- - Yarl Thinakkural

மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூர கணவன்!! -யாழ்.குப்பிளானில் இன்று சம்பவம்-

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் மனைவியை கொடூரமான முறையில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கான 2 பிள்ளைகளின் தாய் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

இன்று புதன்கிழமை நண்பகல் நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

ஊரெழு கிராமத்தை சேர்ந்த  குறித்த பெண் குடும்ப சண்டையினால் கணவனை பிரிந்து வாழ்கின்றார்.
தற்போது குப்பிளான் பகுதியில் வயோதிபர் ஒருவரை பராமரிக்கும் வேலை செய்துவருகின்றார்.

இந்நிலையில் இன்று புதன்கிழமை நண்பகல் குப்பிளான் பகுதியில் உள்ள பெண் வேலை செய்யும் வீட்டுக்கு சென்ற கணவன் அங்கு அவருடைய மனைவி மட்டும் தனித்திருப்பதை சாதகமாக பயன்படுத்தி அவருடைய தலைமுடியை வெட்டியதுடன், முகம் மற்றும் கை ஆகியவற்றில் சரமாரியாக கத்தியால் கீறியும், குத்தியும் சித்திரவதை செய்துவிட்டு தப்பி சென்றிருக்கின்றார்.

இந்நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை, அயலவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் தப்பிச் சென்ற கணவன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post