யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!! - Yarl Thinakkural

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!!

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட கார்மீது இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட காரினை இலக்கு வைத்துக இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் பாரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த வீட்டில் தற்போது வெளிநாட்டில் இருந்து சிலர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை காரணமாக வைத்தே தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உரிமையாளர் யாழ்ப்பாணம் குற்றத்டுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். விரிவான் விசாரணைகள முண்ணெடுக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post