முன்பள்ளிக்குள் காடையர்கள் அட்டகாசம்!! -மனிப்பாய் பொலிஸாரும் உடந்தையாம்- - Yarl Thinakkural

முன்பள்ளிக்குள் காடையர்கள் அட்டகாசம்!! -மனிப்பாய் பொலிஸாரும் உடந்தையாம்-

யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள முன்பள்ளியில் கட்டடத்தில் போதைப் பொருள் பாவனையாளர்களும், மது அருந்துபவர்கள் மலை நேரஙகளில் அங்கு கூடி அட்டகாசங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா பரவர் அச்சுறுத்தல் காரணமாக முன்பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அந்த கட்டடத் தொகுதியில் தினமும் ஒன்று கூடும் இளைஞர்கள் அந்த கட்டடத்தில் இருந்து போதைப் பொருட்களை பயன்படுத்துவதுடன், மதுபானங்களையும் அருந்தி வருகின்றனர். 

இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்ட போதும், இது குறித்த எந்த நடவடிக்கையும் எடுக்காத பொலிஸார், குறித்த முன்பள்ளி கட்டட தொகுதிக்கு வந்து செல்கின்றனர் என்றும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post