பெற்றோல் குண்டு தாக்குதல்!! யாழ் இந்துக் கல்லூரி அருகில் சம்பவம்- - Yarl Thinakkural

பெற்றோல் குண்டு தாக்குதல்!! யாழ் இந்துக் கல்லூரி அருகில் சம்பவம்-

யாழ் இந்துக் கல்லூரிக்கு அன்மையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அண்மையில் உள்ள வீடொன்றின் மீது இனம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. எனினும் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்களே இந்தத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post