“நான் ரெடி விவாதத்திற்கு” நீங்க ரெடியா? -கஜேந்திரகுமார், சிறிகாந்தாவிடம் கேட்கும் சுமந்திரன்- - Yarl Thinakkural

“நான் ரெடி விவாதத்திற்கு” நீங்க ரெடியா? -கஜேந்திரகுமார், சிறிகாந்தாவிடம் கேட்கும் சுமந்திரன்-

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கயேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சிறிகாந்தா ஆகியொருடன் பொது விசாதம் செய்ய தயாராக உள்ளேன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் விவாதம் செய்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அஞ்சுகின்றார் என்றும் அதே போன்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினரும் அஞ்சுகின்றார்கள் என்று கிளிநொச்சியில் உரையாற்றும் போது சுமந்திரன் தெரிவித்திருந்தார். 

சுமந்திரனின் இக் கருத்து தொடர்பில் ஊடக சந்திப்பில் பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடன் விவாதம் செய்யும் தகுதி சுமந்திரனுக்கு இல்லை என்றும், பலமுறை சுமந்திரனுடன் விவாதம் செய்த போது அவர் தடுமாறியது மட்டுமல்லாமல் மூக்குப்புற வீழ்ந்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார். 

இதே போன்று கொக்குவில் பொற்பதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய சிறிகாந்தா பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என்றும் சுமந்திரன் வருவரா என்றும் சுமந்திரனுக்கு சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று செவ்வாய் கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள சுமந்திரனுடைய வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது. 

இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

சிறிகாந்தா விடுத்துள்ள நேரடி விவாத சவாலை தான் ஏற்றுக் கொள்வதாகவும் பொது விவாதம் ஒன்றை மேற்கொள்ள தாம் தயார் என்றும் சுமந்திரன் கூறினார். 

மேலும் கஜேந்திரகுமார் மற்றும் சிறிகாந்தா அகியொருடன் இந்த விவாதம் செய்ய தயார் என்றும் அறிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post