வாளுடன் வீடு புகுந்த கொள்ளை கும்பல்!! -உரும்பிராயில் நகை கொள்ளை- - Yarl Thinakkural

வாளுடன் வீடு புகுந்த கொள்ளை கும்பல்!! -உரும்பிராயில் நகை கொள்ளை-

யாழ்.உரும்பிராய் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்தவர்களை வாளை காட்டி அச்சுறுத்தியதோடு, அவர்கள் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு சோளம் தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒனரறிலேயே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த வீட்டின் பின்பக்கமாக சென்ற நபர்கள் வீட்டின் கதவினை உடைக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது சத்தம் கேட்டு வீட்டின் குடும்பஸதர் வெளியில் வந்துள்ளார்.இதன்போது அவரை கம்பியால் தாக்கியதுடன் வீட்டில் இருந்தவர்களை வாளினை காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.அத்துடன் வீட்டில் இருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டில் இருந்தவர்கள் அவலக் குரல் இட்டுள்ளனர்.அயலவர்கள் ஓடி வந்த போதும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post