மத தலைவர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற தமிழரசு கட்சி!! -கழட்டி விடப்பட்ட ரேலோ,புளோட்டின் வேட்பாளர்கள்- - Yarl Thinakkural

மத தலைவர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற தமிழரசு கட்சி!! -கழட்டி விடப்பட்ட ரேலோ,புளோட்டின் வேட்பாளர்கள்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் இன்று வியாழக்கிழமை மதத்தலைவர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.

இதன்படி யாழ்.மறை மாவட்ட ஆயரை சந்தித்த அவர்கள் தொடர்ந்து நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமச்சாரிய சுவாமியை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளரான அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், ஈ.சரவணபவன், திருமதி சசிகலா ரவிராஜ், இமானுவேல் ஆர்னோல்ட், தபேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் தேர்கள் கள நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடியதுடன் தேர்தல் விஞ்ஞாபன பிரதி ஒன்றினையும் வழங்கி வைத்தனர்.

இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் புளோட் அமைப்பின் தலைவர் த.சித்தாத்தன், அக் கட்சியின் வேட்பாளர் பா.கஜதீபன், ரேலோ கட்சியின் வேட்பாளர் கு.சுரோந்திரன் ஆகியோர் 

Post a Comment

Previous Post Next Post