காதலியுடன் செல்பி எடுத்த போது விபரீதம்!! -இளைஞரின் உயிர் பறிபோனது- - Yarl Thinakkural

காதலியுடன் செல்பி எடுத்த போது விபரீதம்!! -இளைஞரின் உயிர் பறிபோனது-

காதலியுடன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் நின்று செல்பி எடுத்த இளைஞர் கால் தவலி கீழோ விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

தனது காதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெலுவ, தூவிலி எல்லே பகுதியில் குறித்த நபர் அங்குள்ள கல் ஒன்றின் மீது ஏறி “செல்பி” எடுக்க முற்பட்ட போது கால் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளவத்த பகுதியை சேர்ந்த ரத்னராஜா (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் காதலி கொழும்பில் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றின் வைத்தியர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post