கொரோனா தடுப்பூசி மனித சோதனை தமிழ்நாட்டில் ஆரம்பம் - Yarl Thinakkural

கொரோனா தடுப்பூசி மனித சோதனை தமிழ்நாட்டில் ஆரம்பம்

கொரோனா தடுப்பூசி மனித சோதனைகள் சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புனேவை தலைமையிடமாக கொண்டு செயற்படும் பாரத்பயோடெக் மருந்நு நிறுவனம் கோவாக்சின் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னர் மனிதனுக்கு செலுத்தி ஆய்வு செய்யும் சோதனை தொடங்கியுள்ளது.

 இதற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் முழு உடல் தகுதியுடன் எந்தவித நோயும் இல்லாமல் இருக்க வேண்டும். அந்த நபர்களுக்கான பதிவு நேற்று முதல் தொடங்கியது. தமிழகத்தை பொறுத்த வரை சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்த சோதனை நேற்று தொடங்கியது. இந்த சோதனைக்கு தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மருத்துவ கல்லூரி எஸ்.ஆர்.எம். மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post