ரகசியமாக குண்டு தயாரித்த நபர்!! -வெடித்ததால் வைத்தியசாலையில்- - Yarl Thinakkural

ரகசியமாக குண்டு தயாரித்த நபர்!! -வெடித்ததால் வைத்தியசாலையில்-

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தினால் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த தங்கராசா தேவதாஸன் (வயது 43) என்பவரே படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெடிகுண்டு தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையே குறித்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக தெரியவருகிறது.


Post a Comment

Previous Post Next Post