யானையின் தாக்குதலுக்குள்ளான விரிவுரையாளர்!! -விமானம் மூலம் கொழும்பிற்கு அனுப்பிவைப்பு- - Yarl Thinakkural

யானையின் தாக்குதலுக்குள்ளான விரிவுரையாளர்!! -விமானம் மூலம் கொழும்பிற்கு அனுப்பிவைப்பு-

அண்மையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தலையில் படுகாயமடைந்த கிளிநொச்சி விரிவுரையாளர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். 

அவர் இன்று விமானம் மூலமாக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று யாழ்.போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

கிளிநொச்சியில் கடந்த 20 ஆம் திகதி கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பிரிவில் சேவையாற்றும் கொழும்பு களனி பகுதியை சேர்ந்த காயத்திரி டில்ருக்சி என்ற 32 வயதுடைய விரிவுரையாளர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.

தாக்குதலுக்கு உள்ளான விரிவுரையாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். 

இரண்டு தினங்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் மூளை சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இருப்பினும் அவர் இன்று மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post