யுவதி எடுத்த விபரீத முடிவு!! -யாழில் சடலத்தை மீட்ட பொலிஸார்- - Yarl Thinakkural

யுவதி எடுத்த விபரீத முடிவு!! -யாழில் சடலத்தை மீட்ட பொலிஸார்-

யாழ்.ஆறுகால்மடம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜெதீபன் சிவப்பிரியா வயது 19 என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி ஒரு வருடத்திற்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளார். இருப்பினும் தற்போது உயர்தரப்பரீட்சை எழுதுவதற்கு படித்துவந்துள்ளார். கடந்த 10 மாதமாக கணவருடன் வாழ்ந்த நிலையில் இன்றையதினம் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மனமுடைந்த பெண் வீட்டில் தூக்கு போட்டு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post