யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!! - Yarl Thinakkural

யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இன்று 116 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உள்ளிட்ட இருவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

முல்லைத்தீவு விமானப்படையினர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 102 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் 2 பேர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் ஒருவர், பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தில் 2 பேர், முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்தில் 3 பேர், வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை 4 பேர் உள்ளிட்ட 116 பேருக்கான பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

Previous Post Next Post