பல்லம களுகெலே பகுதியில் இளைஞர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்தி அவருடைய தந்தையை கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதில் மகனால் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 39 வயதுடைய தந்தை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்தனர்.
Post a Comment