முதலையின் பசிக்கு இரையான பொலிஸ்!! -விழுந்த கைத் தொலைபேசியை எடுக்க முயன்ற போது சம்பவம்- - Yarl Thinakkural

முதலையின் பசிக்கு இரையான பொலிஸ்!! -விழுந்த கைத் தொலைபேசியை எடுக்க முயன்ற போது சம்பவம்-

மாத்தறை, நில்வளா கங்கையில் தவறி விழுந்த கைத் தெலைபேசியை எடுக்க கங்கைக்குள் இறங்கிய பொலிஸ் அதிகாரி ஒருவரை முதலையொன்று இழுத்துச் சென்றுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி உட்பட சிலர் அவ்விடத்தில் இருந்த போது அதில் ஒருவரின் கைப்பேசி தவறி கங்கையில் விழுந்துள்ளது.

அதனை எடுப்பதற்காக பொலிஸ் அதிகாரி கங்கையில் இறங்கியுள்ளார். பின்னர் தன்னை முதலையொன்று கடிப்பதாக அவர் சத்தமிட்டுள்ளார்.

எனினும் அவரை காப்பாற்ற எவரும் முன்வராததால் கங்கையில் மூழ்கி பொலிஸ் அதிகாரி காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன பொலிஸ் அதிகாரியை தேடி அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

54 வயதுடைய கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 4 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் திஹகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post