யாழ் தேர்தல் அலுவலகத்திற்கு முன் வாள்வெட்டு!! -இன்று காலை சம்பவம்- - Yarl Thinakkural

யாழ் தேர்தல் அலுவலகத்திற்கு முன் வாள்வெட்டு!! -இன்று காலை சம்பவம்-


யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் மீது மாவட்ட செயலக வாசலில் வைத்து வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. 

தேத்தல் அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் இடத்தில் இவ்வாறான துணிகர வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

யாழ் மாவட்ட செயலகத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைக்காக மாவட்ட செயலகத்திற்கு வந்து கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்த இரு நபர்கள் அவரை மாவட்ட செயலக வாசலில் வைத்து வாளால் வெட்யுள்ளனர். 

மோட்டார் சைக்கில் ஒன்றினையும் அந்த நபர்கள் அடித்து நொருக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இதனால் படுகாயம் அடைந்த அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மாவட்டத்தை சுற்றி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post