வீட்டிற்குள் வந்த நாயை சுட்டுக் கொலை செய்த கிராம சேவகர்!! - Yarl Thinakkural

வீட்டிற்குள் வந்த நாயை சுட்டுக் கொலை செய்த கிராம சேவகர்!!


கிராம சேவகர் ஒருவர் தனது வீட்டிற்குள் நுழைந்த அயல் வீட்டில் வசிக்கும் உறவினரின் வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் 2 ஆம் பாம் வீதியிலுள்ள கிராம அலுவலகரின் வீட்டிற்குள் புகுந்த பக்கத்துவீட்டு உறவினரின் நாய் மீது குறிவைத்து குரங்குகள் சுடும் துப்பாக்கியைப்பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் இதனால் குறித்த நாய்க்கு வலிப்பு ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கிராம அலுவலகரிடம் குரங்கு சுடும் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் அதனைப்பயன்படுத்தி நாய் மீது துப்பாக்கி  சூடு நடத்தியுள்ளதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இவ்விடம் குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post