சுமந்திரன், சிறீதரன் மீது நடவடிக்கை!! -மாவை அதிரடி அறிவிப்பு- - Yarl Thinakkural

சுமந்திரன், சிறீதரன் மீது நடவடிக்கை!! -மாவை அதிரடி அறிவிப்பு-

இலங்கை தமிழரசு கட்சிக்குள் இருந்து கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ள எம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் எதிராக தேர்தலுக்குப் பின்னர் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அதிரடி அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளார்.

தற்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது தேர்தல் நேரம் பல பாதிப்புக்களைக் கொண்டு வரும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சிக்கு முறைப்பாடுகள் கிடைத்தால் தேர்தலுக்குப் பின்னர் கட்சி அது பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்படி அறிவப்பினை விடுத்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post