அத்துமீறிய வெளிமாவட்ட மீனவர்கள் அதிரடி கைது!! -வடமராட்சியில் இன்று சம்பவம்- - Yarl Thinakkural

அத்துமீறிய வெளிமாவட்ட மீனவர்கள் அதிரடி கைது!! -வடமராட்சியில் இன்று சம்பவம்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சட்டத்திற்கு மாறான கடற்றொழில் ஈடுபட்ட 13 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் 3 படகுகள் மீட்கப்பட்டதுடன், சட்டவிரோத தொழில் உபகரணங்களும் கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

உடுத்துறை கடற்பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை இரவு வெளிமாவட்ட மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இன்று புதன்கிழமை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் வெளிமாவட்ட மீனவர்களால் சட்டத்திற்கு மாறான கடற்றொழில் ஈடுபடுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து வெளிமாவட்ட மீனவர்கள் 13 பேர் மற்றும் இரு படகுகள், சிலின்டர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Post a Comment

Previous Post Next Post