இளையோருக்கான “வேலை வங்கி” -மணிவண்ணனின் புதிய முயற்சி- - Yarl Thinakkural

இளையோருக்கான “வேலை வங்கி” -மணிவண்ணனின் புதிய முயற்சி-

இளைஞர்கள், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்க வேலை வங்கி ஒன்றை உருவாக்குவேன் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உறுதிமொழி வழங்கியுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

வேலைவாய்ப்பு தொடர்பில் எமது இளைஞர் யுவதிகள் மத்தியில் பெருத்த அங்கலாய்ப்பு உள்ள இன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனியார் துறையை விருத்தி செய்து தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்புகளை பெற்றுகொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றது. 

இந்நிலையில் இன்று புதன்கிழமை அச்சுவேலி பகுதியில் உள்ள தொழிற்பேட்டைக்கு விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்தேன். 

எமது அமைப்பின் கனவு நிறைவேற்றப்படுவது மிக இலகுவானது என்பதை புரிந்துகொண்டேன். நாம் வென்றதும் வேலை வங்கி (job bank) ஒன்று உடனடியாக உருவாக்கப்படும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post