பேருந்தும் - துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து!! -முதியவர் பரிதாப பலி- - Yarl Thinakkural

பேருந்தும் - துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து!! -முதியவர் பரிதாப பலி-

வவுனியா உளுக்குளம் பகுதியில் பேருந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  

வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கிப்பயணித்த பேருந்து உளுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வீதியால் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.  

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.  

Post a Comment

Previous Post Next Post